Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

பள்ளி சுற்றுச்சூழலைப் பாதுகாக்க போலிஸ் உத்தரவாதம் அளித்துள்ளது

24/10/2025 04:51 PM

கோலாலம்பூர், 24 அக்டோபர் (பெர்னாமா)-- மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறை ஊழியர்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய பள்ளிகள் இருக்கும் பகுதிகளில் கட்டுப்பாட்டையும் ரோந்து நடவடிக்கைகளையும் அதிகரிக்க மாநில போலீஸ் தலைவர்கள் அனைவருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தொடர் ரோந்துப் பணிகளைச் செயல்படுத்துவது குற்றவியல் புலனாய்வு மற்றும் சிறப்பு கண்காணிப்புக் குழுவை நிறுவுவது மட்டுமின்றி பொது அமைதியைப் பாதிக்கக்கூடிய எந்தவோர் அச்சுறுத்தல்கள் அல்லது நடவடிக்கைகளையும் முன்கூட்டியே கண்டறிவது ஆகியவையும் இந்த உத்தரவில் அடங்கும் என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில்கூறினார்.

"தேவைப்பட்டால், ரோந்து கார்கள் ஒன்றிலிருந்து ஐந்து நிமிடங்களுக்கு பாதுகாப்பை கவனித்துக் கொள்ள பள்ளி அதிகாரிகள் பள்ளி வளாகத்திற்குள் நுழைய வேண்டும். நாங்கள் அதை செயல்படுத்துவோம்." என்றார் தேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில். 

பள்ளியில் பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்தும் மற்றும் நாடு முழுவதிலும் பள்ளிகளில் போலீஸ் உறுப்பினர்கள் பணிக்கு அமர்த்தப்பட வேண்டும் என்ற பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் பரிந்துரைக்கு ஏற்ப அந்நடவடிக்கை அமைவதாக காலிட் தெரிவித்தார்.

பள்ளிகளில் ரோந்து நடவடிக்கைகளை அதிகரிப்பது அவ்விடத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முயற்சி மட்டுமல்ல. மாறாக கல்வி சமூகத்தில் ஒரு வியூக பங்காளியாக போலீசாரின் வருகை மீது மக்களிடையே நம்பிக்கையை வளர்ப்பதற்கான முயற்சியும் ஆகும் என்று அவர் விவரித்தார்.

பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)