Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்டிருக்கும் எஸ்.பி.எம் மாணவர்கள் உடனடியாக தெரிவிக்கலாம்

24/10/2025 04:30 PM

புத்ராஜெயா, 24 அக்டோபர் (பெர்னாமா)-- 2025-ஆம் ஆண்டு தேர்வெழுதும் SPM மாணவர்கள் இயற்கை பேரிடரில் சிக்கியிருந்தாலோ அல்லது பாதிக்கப்பட்டிருந்தாலோ பள்ளி அல்லது மாநில கல்வித் துறை ஜெ.பி.ன் JPN-க்கு உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதுமட்டுமின்றி, நாடு முழுவதிலும் உள்ள தேர்வு வாரிய செயல்பாட்டு அறை அல்லது ஜெ.பி.ன்-னை தொடர்பு கொள்ளலாம் என்று கல்வி அமைச்சு இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2025-ஆம் ஆண்டு SPM தேர்வின்போது வெள்ளம் போன்ற இயற்கை பேரிடரை எதிர்கொள்ளும் சாத்தியம் இருந்தால் மாணவர் மற்றும் தேர்வு பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனில் கல்வி அமைச்சு எப்போதும் விழிப்புடன் இருக்கும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

தேர்வு நிர்வகிப்பும் நடைமுறையும் சீராக நடைபெறுவதை உறுதி செய்ய தேசிய பேரிடர் நிர்வகிப்பு நிறுவனம், மலேசிய வானிலை ஆய்வு மையம், சுகாதார அமைச்சு, அரச மலேசிய போலீஸ் படை, மலேசிய இராணுவப் படை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, பொது தற்காப்புத் துறை உள்ளிட்ட அனைத்து அரசு நிறுவனங்களுடனும் கல்வி அமைச்சு இணைந்து செயல்படும்.

பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)