அமெரிக்கா, 23 அக்டோபர் (பெர்னாமா)-- ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடனான சந்திப்பை தாம் ரத்து செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம், அவ்விரு அதிபர்களுக்கும் இடையிலான தொலைபேசி பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ஹங்கேரியின் Budapest-டில் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த போவதாக டிரம்ப் கூறியிருந்தார்.
''நாங்கள் புதின் உடனான சந்திப்பை ரத்து செய்தோம்.அச்சந்திப்பு எனக்கு தகுந்ததாகத் தோன்றவில்லை. நமக்கு கிடைக்க வேண்டிய நிலை கிடைக்கப்போவதில்லை என்று உணர்ந்தேன், அதனால் அச்சந்திப்பை ரத்து செய்தேன். ஆனால் எதிர்காலத்தில் அது நிச்சயமாக நிறைவேறும். அடுத்த வாரம், நாங்கள் கூறிய இடங்களில் உங்களில் பலருடன் இருப்போம். அதன் பிறகு, மீண்டும் வாஷிங்டனுக்கு திரும்புவேன்.'' என்றார் டிரம்ப்.
பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)