Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

பினாங்கில் தங்குமிடங்களைக் கொண்ட பள்ளிகளில் போலீஸ் ரோந்து பணிகள்

17/10/2025 05:16 PM

ஜார்ஜ்டவுன், 17 அக்டோபர் (பெர்னாமா) -- பினாங்கு மாநிலத்தில் தங்குமிடங்களைக் கொண்ட பள்ளிகளில், குறிப்பாக இரவு நேரங்களில் ரோந்துப் பணிகளை மேற்கொள்ள மோட்டார் சைக்கிள் ரோந்துப் பிரிவையும் ரோந்து கார்களையும் அம்மாநில போலீஸ் பயன்படுத்தவுள்ளது.

பாதுகாப்பான சூழலை உருவாக்க தங்குமிடங்களைக் கொண்ட பள்ளிகளில் அட்டவணையிடப்பட்ட ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ அசிசீ இஸ்மாயில் தெரிவித்தார்.

"அடிப்படையில் அனைத்து பகடிவதை சம்பவங்கள் மீது நடவடிக்கை எடுக்க நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். மேலும் ஒரு தடுப்பு நடவடிக்கையாகச் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் எங்கள் தொடர்பு அதிகாரிகளை அடிக்கடி பணிக்கு அமர்த்துவோம். அதே நேரத்தில், இரவு நேரங்களில் தங்குமிடங்களைக் கொண்ட பள்ளிப் பகுதிகளுக்குள் போலீஸ் இருப்பை அதிகரிக்கக் கூடுதலாக ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்வோம்," என்று டத்தோ அசிசீ இஸ்மாயில் கூறினார்.

வெள்ளிக்கிழமை, பினாங்கு மாநில போலீஸ் தலைமையகத்தின் மாதாந்திர கூட்டத்திற்குப் பின்னர் டத்தோ அசிசீ செய்தியாளர்களிடம் பேசினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)