கோலாலம்பூர், 16 அக்டோபர் (பெர்னாமா) -- நாடு முழுவது சளிக் காய்ச்சல் INFLUENZA தொற்று அதிகரித்து வரும் வேளையில் இவ்வாண்டு அத்தொற்றின் 41வது வாரத்தில் அதிக எண்ணிக்கையிலான சம்பவங்கள் பள்ளிகளில் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
39வது வாரத்தில் இருந்து அந்நோய் தொற்று அதிகரித்திப்பதாக அண்மையத் தரவுகள் காட்டுகின்றன.
ஆறு விழுக்காட்டில் இருந்த அதன் விகிதம் 40வது வாரத்தில் 7.4 விழுக்காடாவும் 41வது வாரத்தில் 9.2 விழுக்காடாவும் அதிகரித்திருப்பதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.
மிக முக்கியமாக நான் குறிப்பிட வேண்டியது என்னவென்றால் இந்த நோய்த் தொற்று அல்லது பரவல் சுமார் 83 விழுக்காடு பள்ளிகளில் ஏற்படுகின்றது. 65.8 விழுக்காடு பள்ளிகள் மற்றும் 17 விழுக்காடு பாலர் பள்ளிகள் ஆகும். இவை இரண்டும் பள்ளிகள் மற்றும் பாலர் பள்ளிகளில் 83 விழுக்காடு சம்பவங்களை ஏற்படுத்துகின்றன. எஞ்சியவை நிறுவனங்கள், கல்லூரிகள், பணியிடங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் நிகழ்கின்றன என்று டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட் கூறினார்.
நாடு முழுவதும் இன்ஃப்ளுன்சா நோய் தீவிரம் குறித்து அறிந்து கொள்ள மக்களவையில் இன்று பூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் சுஹைசான் கயாட் எழுப்பிய கேள்விக்கு டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட் அவ்வாறு பதிலளித்தார்.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)