Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

நான்காம் படிவ மாணவி குத்தி கொலை - மாணவன் கைது

14/10/2025 04:29 PM

கோலாலம்பூர், 14 அக்டோபர் (பெர்னாமா)-- சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு இடைநிலைப் பள்ளியில் நான்காம் படிவ மாணவி, மாணவனால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

இன்று காலை மணி 9.30 அளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அம்மாணவி பள்ளி வளாகத்தினுள்ளே உயிரிழந்ததாக தேசிய போலீஸ் படைத் தலைவர்டத்தோஸ்ரீ காலித் இஸ்மாயில் தெரிவித்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து அதே பள்ளியில் பயிலும் 14 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக கூறினார்.

"இந்த சம்பவத்திற்கான காரணத்தை போலீஸ் விசாரித்து வருகிறது. மேலும் சம்பவ இடத்தில் போலீஸ் விசாரணையை முடித்து, உடல் பிரேதப் பரிசோதனைக்காக பி.பி.யு.எம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காக நாங்கள் காத்திருப்போம். மேலும், 14 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்," என்றார் தேசிய போலீஸ் படைத் தலைவர்
டத்தோ ஶ்ரீ காலிட் இஸ்மாயில். 
  
இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற பகடிவதை எதிர்ப்பு பிரச்சாரத்தை தொடக்கி வைத்தப் பின்னர் டத்தோ ஶ்ரீ காலிட் செய்தியாளர்களிடம் பேசினார்.

பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு பள்ளியில் இன்று காலை மற்றொரு மாணவரால் கத்தியால் குத்தப்பட்டதாகக் கூறப்படும் ஒரு மாணவி உயிரிழந்ததாக ஊடகங்கள் வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி (ஆஸ்ட்ரோ 502)