Ad Banner
Ad Banner
Ad Banner
 அரசியல்

போர்க்களத்தில் இனி அமெரிக்கா சாதிக்க எதுவும் இல்லை - டிரம்ப் சூளுரை

14/10/2025 04:16 PM

ஜெருசலம், 14 அக்டோபர் (பெர்னாமா)-- போர்க்களத்தில் தங்கள் நாடு இனி சாதிக்க எதுவும் இல்லை என்று இஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், ஹமாசுக்கு எதிரான இஸ்ரேலின் இரண்டு ஆண்டுகால போர் மற்றும் ஹெஸ்பொல்லாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் அமைதியை நோக்கி செயல்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

''அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கி இவ்வாரம் வரை இஸ்ரேல் போரில் ஈடுபட்டுள்ள ஒரு நாடாக இருந்து வருகிறது. பெருமையும் விசுவாசமும் கொண்ட மக்களால் மட்டுமே தாங்கக்கூடிய சுமைகளைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. அது மிகவும் கடினமான காலமாகும். இப்பகுதி முழுவதும் உள்ள பல குடும்பங்கள், உண்மையான அமைதியின் ஒரு நாளை அறிந்து பல ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், இப்போது இறுதியாக, இஸ்ரேலியர்களுக்கு மட்டுமல்ல, பாலஸ்தீனர்களுக்கும், பலருக்கும், நீண்ட மற்றும் வேதனையான கனவு இறுதியாக முடிந்துவிட்டது,'' என்றார் அமெரிக்க அதிபர்.

இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையிலான அமெரிக்காவின் மத்தியஸ்த போர் நிறுத்தம் பலவீனமாக இருந்தாலும் வட்டார நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும் ஒரு வாய்ப்பைப் பயன்படுத்த டிரம்ப் உறுதியாக உள்ளார்.

இஸ்ரேல் ஆயுத பலத்தால் முடிந்த அனைத்தையும் வென்றுள்ளதாகக் கூறிய அவர் போரைத் தாண்டி சிந்திக்குமாறு வலியுறுத்தினார்.

அதோடு இந்த ஆண்டு தொடக்கத்தில் இஸ்ரேலுடனான ஈரானின் மோதலின்போது ​​ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டதன் வழி இவ்வட்டாரத்தில் ஒரு அமைதி ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டதை டிரம்ப் சுட்டிக்காட்டினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி (ஆஸ்ட்ரோ 502)