வெராக்ரூஸ், 12 அக்டோபர் (பெர்னாமா) -- தென் மெக்சிகோவில் பெய்த கனமழையால் சுமார் 37 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சில இடங்களில் வெள்ளம் வடியத் தொடங்கியிருப்பததைத் தொடர்ந்து, உள்ளூர்வாசிகள் துப்புறவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரேமண்ட் மற்றும் பிரிசிலா எனப்படும் வெப்பமண்டல புயல்களினால் கனமழை பெய்ததோடு நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.
பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
கடலோர மாநிலமான வெராக்ரூஸில் ஐவர், மத்திய மாநிலமான குவெரெட்டாரோவில் ஒருவர், பியூப்லாவில் ஒன்பது பேர், ஹிடால்கோவில் 22 பேர் மாண்டதாக பொது பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தெற்கு வெராக்ரூஸில், சுமார் 16,000 குடியிருப்பாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 220 பேர் மீட்கப்பட்டு 19 தற்காலிக நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மெக்சிகோவின் பல மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று மெக்சிகன் வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]