Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

கல்வி அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடு அதிகரித்துள்ளது

10/10/2025 07:16 PM

கோலாலம்பூர், 10 அக்டோபர் (பெர்னாமா) --   மடானி அரசாங்கத்தின் முன்னுரிமைகளில் பள்ளி உட்கட்டமைப்பின் தரமும் உட்படுத்தப்பட்டுள்ளது.

கடந்தாண்டு தாக்கல் செய்யப்பட்ட 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்வியமைச்சிற்கு ஆறாயிரத்து 420 கோடி ஒதுக்கப்பட்டிருந்த வேளையில், இன்று பிரதமர் தாக்கல் செய்திருந்த 2026-ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் அது ஆறாயிரத்து 620 கோடி ரிங்கிட்டாக அதிகரித்துள்ளது.

"சபா மற்றும் சரவாக் மாநிலங்களில் உள்ள 520க்கும் மேற்பட்ட பள்ளிகளை மேம்படுத்த 200 கோடி ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், பழுதுபார்க்கப்பட வேண்டிய நிலையில் உள்ள சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகள் உட்பட அனைத்து வகையான பள்ளிகளையும் பழுதுபார்த்துப் பராமரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதில் செரியானில் உள்ள ஶ்ரீ சாடோங் தேசியப் பள்ளி, துவாரானில் உள்ள சபாண்டார் தேசியப் பள்ளி, ஜோகூரில் உள்ள பண்டார் லாயாங்காசா பள்ளி உட்பட 38 புதிய பள்ளிகள் கட்டப்படும்'', என்றார் அவர்.

இதைத் தவிர்த்து, அதிக மாணவர்களைக் கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகளைக் கட்டுவதற்காக 10 கோடி ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளது.

அவற்றுடன், 10 கோடி ரிங்கிட்டுக்கும் அதிகமான ஒதுக்கீட்டில் ஏற்கனவே உள்ள கட்டிடங்களில் 350 புதிய பாலர் வகுப்புகளும் கட்டப்படுகின்றன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)