திரெங்கானு, 10 அக்டோபர் (பெர்னாமா) -- சமூக வலைத்தளத்தில் விளம்பரபடுத்தப்பட்ட இல்லாத ஒரு முதலீட்டு மோசடியை நம்பி 40 வயது ஆடவர் ஒருவர் 154,291 ரிங்கிட் நிதியை இழந்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி டிக்டோக் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட எழுதுபொருள் விநியோக முதலீட்டில் அவ்வாடவர் ஈடுபட்டதாக கோலா திரெங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி அஸ்லி முஹமட் நோர் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
அதிக லாபம் கிடைக்கும் முதலீட்டு திட்டம் என்று உறுதியளிக்கப்பட்டப் பின்னர், கடந்த செப்டம்பர் 19 தொடங்கி அக்டோபர் மூன்றாம் தேதி வரை ஐந்து வெவ்வேறு நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளுக்கு 154,291 ரிங்கிட்டை 10 பரிவர்த்தனைகளின் மூலம் பாதிக்கப்பட்ட அவ்வாடவர் செலுத்தியுள்ளார்.
எனினும், உறுதியளிக்கப்பட்டபடி எந்த லாபத்தையும் பெறாததால் அவர் அந்த முதலீட்டு திட்டத்திலிருந்து விலகியுள்ளார்.
குற்றவியல் சட்டம் செக்ஷன் 420-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுவதாக அஸ்லி கூறினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]