Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

அரசாங்க நிகழ்ச்சிகளில் மதுபானம்; பிரதமர் கடுமையான எச்சரிக்கை

07/10/2025 05:34 PM

சிப்பாங், 07 அக்டோபர் (பெர்னாமா) -- அரசாங்க நிகழ்ச்சிகளில் மதுபானம் பரிமாறிய தவறு, மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு அமைச்சர் டத்தோ ஶ்ரீ தியோங் கிங் சிங்கிற்கும் சம்பந்தப்பட்ட அமைச்சிற்கும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.

அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நிறைவைடைந்த பின்னரே, மதுமானம் பரிமாறப்பட்டதாக கூறப்படும் விளக்கம் பொருந்தமற்றது.

ஏனெனில், அரசாங்க கொள்கையின்படி, அதை பரிமாறுவதற்கு ஒருபோதும் அனுமதியில்லை என்றும் அவர் எடுத்துரைத்தார்.

அரசாங்கத்தின் கொள்கை கண்டிப்பானது. ஒன்றாவதாக, அதிகாரப்பூர்வ அரசாங்க நிகழ்ச்சிகளில் மது பரிமாற அனுமதியில்லை. இரண்டாவதாக, அச்சம்பவம் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி முடிந்த பிறகு நடைபெற்றது. ஆனால், அது அதே இடத்தில், அதே விழாவாக இருந்தது என்பது மொடெக்கின் விளக்கம். இந்தத் தவறை மீண்டும் செய்ய வேண்டாம் என்று அமைச்சருக்கும் அமைச்சிற்கும் நாங்கள் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளோம். இருப்பினும், அந்நிகழ்ச்சி முடிந்து விட்டது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அது ஒருபோதும் பொருத்தமானதல்ல. என்றார். 

மலேசியாவிற்கு அதிகாரப்பூர்வ வருகையளித்து, இன்று நாடு திரும்பிய பாகிஸ்தான் பிரதமர், முஹமட் ஷெமாஷ் ஷாரிப்பை வழியனுப்பிய பின்னர் செய்தியாளர்கலிடம் பேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் அவ்வாறு கூறினார்.

 

இதனிடையே, மது அருந்துதல் தொடர்பாக அண்மையில் பரவலாக பகிரப்பட்ட பிரச்சனையைத் தொடர்ந்து, கண்காணிப்பைக் கடுமையாக்குவதற்கும், அனைத்து நிகழ்வுகளும் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளுக்கு ஏற்ப பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்கும் சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு அமைச்சு, MOTAC உறுதி கொண்டுள்ளதாக அவ்வமைச்சு இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய குழப்பத்திற்கு MOTAC வருத்தம் தெரிவித்ததோடு, இதுபோன்று மீண்டும் நிகழாமல் தடுக்க இச்சம்பவத்தை ஒரு பாடமாகக் கொள்ள வேண்டும் என்றும் அவ்வமைச்சு வலியுறுத்தியது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)