Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

கம்போங் சுங்கை பாரு: சிறப்பு விளக்கக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறும்

06/10/2025 05:42 PM

கோலாலம்பூர், 06 அக்டோபர் (பெர்னாமா) -  கம்போங் சுங்கை பாரு குடியிருப்பாளர்கள் தங்கள் உரிமைகளைப் பெறுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மற்றும் மலாய் சமூகத்தினர் அப்பகுதியில் தொடர்ந்து நிலைத்திருப்பதை உறுதி செய்வது உட்பட அப்பகுதியின் மறுவடிவமைப்பு தொடர்பான சிறப்பு விளக்கக் கூட்டம் ஒன்று வரும் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெறும். 

இந்நகரில் மலாய் சமூகத்தினரைப் பராமரிக்க, குறிப்பாக கம்போங் சுங்கை பாரு மற்றும் கம்போங் பாருவின் மறுவடிவமைப்பில் ஆக்கப்பூர்வ மற்றும் நிலையான பொருளாதார மேம்பாட்டு மாதிரிகளை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சலிஹா முஸ்தாபா தெரிவித்தார். 

இந்தத் திட்டத்திற்கான சிறந்த ஒத்துழைப்பைக் கண்டறியும் பொருட்டு மேம்பாட்டாளர்கள் மற்றும் UDA Holdings நிறுவனம் உள்ளிட்ட அரசு சார்ந்த நிறுவனங்கள், GLC-உடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார். 

"எனக்கு முக்கியமானது என்னவென்றால், ஒப்புக்கொண்ட குடியிருப்பாளர்களுக்கு ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் காத்திருக்கும் வீடுகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதுதான்," என்று அவர் கூறினார்.

மலாய்க்காரர்களின் பண்பாட்டிற்குப் பங்கம் ஏற்படுத்தாமல் கோலாலம்பூரின் முன்னேற்றத்திற்கு ஓர் உந்துதலாக இரண்டு வரலாற்று கிராமங்களின் வளர்ச்சியை உறுதி செய்ய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)