புத்ரஜெயா, 06 அக்டோபர் (பெர்னாமா) -- சபா மாநில தேர்தலுக்கான பிரச்சாரங்கள் சிறந்த முறையில் நடத்தப்படும் என்று தாம் நம்புவதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
மேலும், அனைத்து தரப்பினரும் இது தொடர்பான விவாதங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
''கலைக்கப்பட்டது. விவாதங்களில் கவனமாக இருக்க வேண்டும். பிரச்சாரங்கள் சிறப்பாக நடைபெறும் என்று நம்புகிறேன். மக்களுக்குச் சிறந்த தேர்வைக் கொடுங்கள்,'' என்றார் அவர்.
இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டு Khazanah Megatrends எனும் கருத்தரங்கை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தப் பின்னர் அன்வார் செய்தியாளர்களிடம் பேசினார்.
சபா மாநில அரசியலமைப்பின் படி, மாநில தேர்தலை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்ட 60 நாள்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)