பட்டர்வொர்த், 04 அக்டோபர் (பெர்னாமா) -- இன்று காலை பினாங்கு, பட்டர்வொர்த் ஜாலான் பெர்மாதாங் பாருவில் விபத்துக்குள்ளான கார், தீப்பிடித்து எரிந்ததால் அதில் பயணித்த இருவர் கருகி மாண்டனர்.
இச்சம்பவம் குறித்து தமது தரப்பிற்குக் காலை மணி 7.09-க்கு தகவல் கிடைத்ததாகவும், பட்டர்வொர்த் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த எழுவர் சம்பவ இடத்திற்கு அனுப்பட்டதாகவும், பினாங்கு மாநில மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை ஜே.பி.பி.எம் இயக்குநர் முஹமட் ஷொகி ஹம்சா தெரிவித்தார்.
சாலை விபத்தினால், Proton Saga BLM ரக கார் 80 விழுக்காடு தீக்கிரையாகியதாக முஹமட் ஷொகி கூறினார்.
உடல் கருகி மாண்ட இருவரின் அடையாளங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை.
சம்பவ இடத்தில் இருந்த மருத்துவ ஊழியர்களால் விபத்துக்குள்ளான அவ்விருவரும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
பிரேதப் பரிசோதனைக்காக அவர்களின் உடல்கள் கப்பலா பத்தாஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)