தைப்பிங், 04 அக்டோபர் (பெர்னாமா) -- பேராக் மாநிலத்தில் நீர் தொடர்பான திட்டங்களுக்கு 12-வது மலேசியா திட்டத்தின் கீழ் மொத்தம் 540 கோடி ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
20 விரிவாக்கத் திட்டங்களும் இரண்டு புதிய திட்டங்களும் அடங்கும் என்று துணைப் பிரதமர் Datuk Seri Fadillah Yusof தெரிவித்தார்.
எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் உருமாற்ற அமைச்சு, PETRA-வின் கீழ் உள்ள நிறுவனங்கள் முழு திட்டத்தையும் நிறைவு செய்வதன் வழி, மக்கள் மிகவும் பாதுகாப்பான நீர் விநியோகம், குறைந்த பேரிடர் ஆபத்து மற்றும் நிலையான நீர் வளங்களை அடிப்படையாகக் கொண்ட புதிய பொருளாதார வாய்ப்புகளை அனுபவிக்க முடியும் என்று மத்திய அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளதாக Fadillah Yusof கூறினார்.
மலேசிய நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை, JPS, நீர் விநியோகத் துறை, JBA மற்றும் கழிவுநீர் சேவை துறை, JPP ஆகியவை அதில் அடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
"ஆறுகள் நம் அனைவருக்கும் அடிப்படைத் தேவை மட்டுமல்ல, நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான ஆதாரமாகவும் உள்ளன. அதனால்தான், இந்த தடத்தில், ஜே.பி.எஸ் என்ன உருவாக்கியுள்ளது என்பதைப் பார்க்கும்போது, சிறிய ஹைட்ரோவைப் பெற முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் குரு ஹைட்ரோவை உருவாக்க முடியும் என்று நான் நம்புகிறேன்", என்றார் அவர்.
இன்று, தைப்பிங், Sungai Batu Tegoh-வில் தேசிய அளவிலான 2025-ஆம் ஆண்டு உலக ஆறுகள் தினக் கொண்டாட்டத்தில் உரையாற்றிய எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் உருமாற்ற அமைச்சருமான Fadillah அத்தகவல்களைத் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)