ஈப்போ, 04 அக்டோபர் (பெர்னாமா) -- வெள்ளிக்கிழமை, பேராக் ஈப்போவில் ரக்பி போட்டியில் பங்கேற்ற மாணவர் ஒருவரின் திடீர் மரணத்தைத் தொடர்ந்து, அப்போட்டியை ரத்து செய்ய கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.
அம்மாணவரின் மரணத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக, நாளை வரை நடைபெற திட்டமிடப்பட்டிருந்த அப்போட்டி ரத்து செய்யப்படுவதாகவும், அப்போட்டி மற்றொரு நாளில் நடத்தப்படும் என்றும் அறிக்கை ஒன்றின் வழி கல்வி அமைச்சு தெரிவித்திருக்கிறது.
போட்டியின் போது மயங்கி விழுந்த அம்மாணவருக்குப் பணியில் இருந்த மருத்துவக் குழுவால் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டதாக அமைச்சு கூறியது.
அதன் பின்னர், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)