Ad Banner
Ad Banner
 பொது

தொடர்பு துண்டிப்புக்கு முன் அனைத்து மலேசிய ஆர்வலர்களும் நலம்

03/10/2025 04:23 PM

சிப்பாங், 03 அக்டோபர் (பெர்னாமா) -- தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு முன்னர் கப்பலில் இருந்த அனைத்து 23 மலேசிய ஆர்வலர்களும் நலமுடன் இருந்ததாக சுமூட் நுசந்தாரா செயல்பாட்டு மையம், எஸ்.என்.சி.சி-இன் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் சானி அராபி அப்துல் அலிம் அராபி கூறினார். 

''கடைசி நேரம் வரை அவர்கள் நலமாக இருந்தார்கள். நல்ல நிலையில் இருந்தார்கள். இருப்பினும், தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள். இது ஓர் எளிதான சூழல் அல்ல. நமது பிரார்த்தனைகள் தேவைப்படும் ஒன்றாக உள்ளது,'' என்றார் அவர். 

சிரியுஸ், எஸ்ட்ரெலா, அல்மா மற்றும் ஹுகா ஆகிய நான்கு ஜி.எஸ்.எஃப் கப்பல்கள் இஸ்ரேலில் உள்ள எஷ்டொட் துறைமுகத்திற்குள் நுழைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]