பத்துமலை, 01 அக்டோபர் (பெர்னாமா) - சிலாங்கூர் மாநிலத்தில் அதிகமான மாணவர்களைக் கொண்ட தமிழ்ப்பள்ளிகளில் ஒன்றான பத்துலைத் தமிழ்ப்பள்ளியிலும் கலை அம்சத்துடன் சரஸ்வதி பூஜை நடைபெற்றது.
பத்துமலை சுப்ரமணியர் ஆலயக் குருக்கள் தலைமையில் நடைபெற்ற சிறப்புப் பூஜைக்கு முன்னதாக, மேளவாத்திய இசையுடன், ஆசிரியர்கள் பத்துமலை அடிவாரத்தில் உள்ள விநாயகர் சன்னதியில் வழிப்பாடு செய்ததாக பள்ளியின் தலைமையாசிரியைர் சரஸ்வதி செங்கல்ராயன் தெரிவித்தார்.
"அங்கு பூஜை முடித்த மீண்டும் பள்ளிக்கு வந்து பூஜை செய்து பிள்ளைகளுக்கு பிரசாதம் வழங்கி இன்றைய தினத்தை சிறப்பாக நாங்கள் நிறைவு செய்தோம். இது இருவேளைப் பள்ளி என்பதால், காலையில் பயிலும் மாணவர்களுக்கு இப்போதும், மதியம் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு மாலையிலும் பூஜை தனித்தனியாக நடைபெறும்," என்றார் அவர்.
இத்தகைய சமய விழாக்களின் மூலம் மாணவர்கள் பாரம்பரிய கலாச்சார மரபுகளோடு ஆன்மீகப் பண்புகளையும் கற்றுத் தெளிய முடியும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)