புத்ராஜெயா, செப்டம்பர் 27 (பெர்னாமா) -- நேற்று நள்ளிரவு தொடங்கி BUDI95 திட்டம் அமலாக்கம் தொடங்கியிருக்கும் நிலையில், முதற்கட்டமாக சுமார் மூன்று லட்சம் இராணுவ மற்றும் போலீஸ் உறுப்பினர்கள் நன்மை அடைந்துள்ளனர்.
தற்போதைய சந்தை விலை 2 ரிங்கிட் 05 சென்னை காட்டிலும், BUDI95 திட்டத்தின் வழி, RON95 பெட்ரோல் ஒரு ரிங்கிட் 99 சென்னுக்கு விற்கப்படுகிறது.
BUDI95 திட்டத்தின் அமலாக்கம் எளிதானது என்றும் பயனீட்டாளர்களுக்குச் சுமையை ஏற்படுத்தாது என்றும் தொடர்பு துணை அமைச்சர் தியோ நி சிங் தெரிவித்திருக்கிறார்.
"டச் என் கோ-வை (Touch 'Ngo) பயன்படுத்த விரும்பினால் உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்க , நீங்கள் முகப்பில் பணம் செலுத்த வேண்டும்," என்று அவர் குறிப்பிட்டார்.
இன்று தமது முகநூலில் பதிவிட்ட காணொளி ஒன்றில் தியோ நி சிங் அவ்வாறு கூறினார்.
வெளிநாட்டு ஓட்டுநர் உரிமங்களை வைத்திருக்கும் மலேசியர்களின் நிலைமையை அரசாங்கம் அறிந்திருப்பதாகவும், இவ்விவகாரத்தைப் போக்குவரத்து அமைச்சு ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.
"உங்கள் அனைவருக்கும் விரைவில் நற்செய்தி உள்ளது என்று நான் நம்புகிறேன்," என்று தியோ தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)