கோலாலம்பூர், 26 செப்டம்பர் (பெர்னாமா) - வரும் அக்டோபரில் நடைபெறவுள்ள 47-வது ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்கு முன்னதாக அமெரிக்கா உடனான பரஸ்பர ஒப்பந்தத்தை பூர்த்தி செய்ய அதனை இறுதி செய்யும் பணிகளை மலேசியா மேற்கொண்டு வருகிறது.
நேற்று, நடைபெற்ற இருதரப்பு கூட்டத்தில் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி Jamieson Greer உடன் கலந்துரையாடப்பட்ட முக்கிய அம்சங்களில் இதுவும் ஒன்றாகும் என்று முதலீடு, வாணிப மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் கூறினார்.
"இரு தலைவர்களும் எங்களுக்கு இந்த பொறுப்பை ஒப்படைத்துள்ளனர். அதனால், அதை நிறைவு செய்ய நாம் முயற்சி செய்ய வேண்டும். அதையே அடிப்படையாகக் கொண்டு நான் செயல்பட வேண்டும். நிச்சயமாக நாம் அதை நிறைவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. காரணம், அந்த வகையான உறுதி வணிக ரீதியில் நல்லது. அவர்கள் பரிமாற்றம் தொடர்பான அம்சங்களில் திருப்தியாக உள்ளனரா? ஆமாம்," என்றார் அவர்.
எனினும், வரி விதிப்பை குறைப்பது தொடர்பான விவகாரம் கலந்துரையாடப்படவில்லை என்றும் மாறாக, ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட அம்சங்களை இறுதி செய்வதிலேயே கவனம் செலுத்தப்பட்டதாகவும் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் தெரிவித்தார்.
கோலாலம்பூரில் 57-வது AEM கூட்டம் மற்றும் அதன் தொடர்புடைய கூட்டங்களுக்கு இடையே நடைபெற்ற இருவழி சந்திப்பில் இரு தரப்பினரும் தங்கள் நாடுகள் குறித்து பகிர்ந்து கொண்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)