Ad Banner
Ad Banner
 பொது

மீனவர்கள், விவசாயிகள் & படகு உரிமையாளர்களின் முறையீடுகளை அரசாங்கம் பரிசீலிக்கும்

26/09/2025 03:40 PM

புத்ராஜெயா, 26 செப்டம்பர் (பெர்னாமா) - BUDI 95 எனப்படும் BUDI MADANI RON95 திட்டத்தின் பலன்களைப் பெறும் வகையில் ரோன் 95 பெட்ரோலைப் பயன்படுத்தும் மீனவர்கள், விவசாயிகள் மற்றும் படகு உரிமையாளர்களின் முறையீடுகளை அரசாங்கம் பரிசீலிக்கும் என்று டத்தோ ஸ்ரீ அன்வார் தெரிவித்தார்.

வாகன உரிமம் இல்லாவிட்டாலும், சபா, சரவாக் மற்றும் கிளந்தான் ஆகிய மாநிலங்களில் RON95 பெட்ரோலைப் பயன்படுத்தும் மீனவர்கள் அல்லது படகு உரிமையாளர்கள் இருப்பதை அரசாங்கம் அறிந்திருப்பதாக அவர் கூறினார்.

"அவரிடம் வாகனப் பதிவேடு இல்லை. அவருடைய படகைத் தவிர வேறு எதுவும் இல்லை. அவர்கள் அதிகம் இல்லாததால் அவற்றை நாம் பரிசீலிக்கலாம். அதிகம் இல்லை. உண்மையாக அவர்கள் ரோன் 95 பெட்ரோலை பயன்படுத்துகிறார்கள் என்றால் நிச்சயமாக உதவுவோம் என்று நான் உத்தரவாதம் அளிக்கிறேன். ஆனால், இந்த வெறுப்பாளர்களின் அணுகுமுறையைப் பின்பற்றாதீர்கள். இதைப் பயன்படுத்தி ரத்து செய்பவர்கள். இது (BUDI95) கோடிக்கணக்கான மக்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் பயனளிக்கிறது," என்றார் அவர்.

மின்சார உற்பத்தி இயந்திரங்கள் மற்றும் புல்வெட்டும் இயந்திரங்களை வைத்திருப்பவர்கள் இந்த பட்டியலில் இணைக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)