Ad Banner
Ad Banner
 பொது

அக்டோபர் முதலாம் தேதிக்குள் எஸ்.எல்.டி பொருத்த வேண்டும்

24/09/2025 05:11 PM

புத்ராஜெயா, 24 செப்டம்பர் (பெர்னாமா) --  அக்டோபர் முதலாம் தேதி தொடங்கி வேகக் கட்டுப்பாட்டுச் சாதனம், எஸ்.எல்.டி-ஐ பொருத்துவது கட்டாயமாக்கப்படவுள்ள நிலையில், விரைவுப் பேருந்துகள் மற்றும் சுற்றுலாப் பேருந்துகள் உட்பட ஒரு லட்சத்து 5000-க்கும் அதிகமான அல்லது 97.32 விழுக்காட்டு வணிக வாகனங்கள், எஸ்.எல்.டி-ஐ பொருத்தியதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்று அந்தோணி லோக் தெரிவித்தார்.

அந்த எண்ணிக்கையில், 2,528 விரைவுப் பேருந்துகள், 6,241 சுற்றுலாப் பேருந்துகள் மற்றும் 3,500 கிலோகிராமிற்கு மேல் எடையுள்ள ஒரு லட்சத்து 36 சரக்கு லாரிகள் அடங்கும் என்று அவர் கூறினார்.

"ஏற்கனவே எஸ்.எல்.டி.-ஐ பொருத்தி இருக்க வேண்டிய மொத்தம் 108,805 வாகனங்களைச் சரிபார்க்கப்பட வேண்டும். இருப்பினும், 2025 செப்டம்பர் 23-ஆம் தேதி வரை, 2,915 வாகனங்கள் மட்டுமே எஸ்.எல்.டி.-ஐ பொருத்தியுள்ளன. இது 3 விழுக்காட்டிற்கும் குறைவு. 97 விழுக்காட்டினர் இந்த அறிவுறுத்தலைப் புரிந்து கொள்ளவில்லை அல்லது போக்குவரத்து அமைச்சை தீவிரமாகக் கருதவில்லை. அவர்கள் நமது பொறுமையை சவால் செய்ய விரும்புகிறார்கள். நாங்கள் அதை (எஸ்.எல்.டி.-ஐ) செயல்படுத்த மாட்டோம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்", என்றார் அவர்.

குறிப்பிட்ட தேதியில் எஸ்.எல்.டி.-ஐ அமல்படுத்துவதில் அமைச்சும் சாலைப் போக்குவரத்துத் துறை, ஜே.பி.ஜே-வும் சமரசம் செய்யாது என்று அவர் குறிப்பிட்டார்.

அக்டோபர் முதலாம் தேதி தொடங்கி எஸ்.எல்.டி.-ஐ பொருத்தாத வணிக வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அறிவிக்கை வெளியிடப்படவுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)