Ad Banner
Ad Banner
 பொது

ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்க நேர நீட்டிப்பைச் செய்கிறது ஜே.பி.ஜே

22/09/2025 06:24 PM

கோலாலம்பூர், 22 செப்டம்பர் (பெர்னாமா) - BUDI 95 திட்டம் அமல்படுத்தப்படவிருப்பதை அடுத்து ஓட்டுநர் உரிம முகப்பு மற்றும் இதர முகப்புகளுக்கான செயல்பாட்டு நேரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை மணி 8.30 தொடங்கி மாலை மணி 4.30 வரை நீட்டிக்க, சாலைப் போக்குவரத்துத் துறை ஜே.பி.ஜே தயாராக உள்ளது.

வார நாள்களில் வேலைப் பளுவால் நேரப் பற்றாக்குறையை எதிர்நோக்குபவர்களுக்கு இந்த வார இறுதி நேர நீட்டிப்பு தங்கள் ஓட்டுநர் உரிம புதுப்பித்தலை எளிமையாக்கும் என்று ஜே.பி.ஜே தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபட்லி கூறினார். 

இம்மாதம் 27 தொடங்கி அக்டோபர் 26-ஆம் தேதி வரையில் நாடு முழுவதும் உள்ள மாநில மற்றும் கிளை ஜே.பி.ஜே அலுவலங்களில் இந்த நேர நீட்டிப்பு அமல்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார். 

23 லட்சம் பேருக்கு, CDL எனப்படும் தகுதியுள்ள ஓட்டுநர் உரிமம் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக காலாவதியாகி இருப்பதாக அவர் தெரிவித்தார்.  

அதேவேளையில், ஒரு கோடியே 52 லட்சம் பேர் செல்லுபடியாகும் CDL-ஐ கொண்டிருக்கின்றனர். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)