கீவ், 21 செப்டம்பர் (பெர்னாமா) -- ரஷ்ய தரப்பின் F-16 போர் விமானங்கள், வான் தற்காப்பு படையின் ஆளில்லா விமானங்கள் போன்றவை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியதாக உக்ரேன் வான்படை சனிக்கிழமை வெளியிட்ட காணொளியில் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை அதிகாலை வரை ரஷ்யா பெருமளவிலான ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார்.
அந்த தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தனர்.
மேலும், பல குடியிருப்பு கட்டிடங்களும் முக்கிய அடிப்படை வசதிகளும் சேதமடைந்ததாகவும் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார்.
உக்ரேனின் பல்வேறு பகுதிகளில் உள்ள அடிப்படை வசதிகள், உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து ரஷ்யா சுமார் 580 ஆளில்லா விமானங்கள் மற்றும் 40 ஏவுகணைகளை ஏவியதாக செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அவற்றில் சுமார் 550 ஆளில்லா விமானங்கள் 30 ஏவுகணைகளும் வான்பாதுகாப்பு அமைப்புகள் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அவர் அறிக்கையின் வழி தெரிவித்தார்.
போர் ஆரம்ப காலத்தில் குறைந்த நிலையில் இருந்த ரஷ்ய தாக்குதல், இப்போது நூற்றுக்கணக்கான ஆளில்லா விமானங்கள் வழி அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரேனும், ரஷ்யாவின் உள்நாட்டு பகுதிகளில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்கள், எரிபொருள் கிடங்குகளைக் குறிவைத்து வருவதாகவும் செலன்ஸ்கி குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)