வாஷிங்டன், 20 செப்டம்பர் (பெர்னாமா) -- டிக்டாக் தொடர்பான பேச்சுவார்த்தையில், அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்பும் சீன அதிபர் சி ஜின்பிங்கும் முன்னேற்றம் கண்டுள்ள நிலையில், இன்னும் ஆறு வாரங்களில் இருவரும் நேருக்கு நேர் சந்திப்பர்.
தென் கொரியா, கியோங்ஜுவில், அடுத்த மாதம் 31-ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சநிலை மாநாடு, APEC-யில் தொடர் பேச்சுவார்த்தையை நடத்த அவ்விரு தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
டிக்டாக் குறித்த கலந்துரையாடலுக்கு அதிபர் சி இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், அவர்களின் சந்திப்பின் போது ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான சாத்தியங்கள் இருக்கலாம் என்றும் டிரம்ப் கூறினார்.
கட்டமைப்பு ஒப்பந்தத்திற்கு இவ்வாரம் பெய்ஜிங் அளித்த இறுதி ஒப்புதல், டிக்டாக் செயல்பாட்டில் இருப்பதை உறுதி செய்வதற்காக டிரம்ப் தீர்க்க வேண்டிய சவால்களில் ஒன்றாகும்.
அமெரிக்காவில் உள்ள டிக்டாக்கின் சொத்துகளை அதன் சீன உரிமையாளர் ByteDance விற்பனை செய்யவில்லை என்றால், அடுத்தாண்டு ஜனவரி மாதத்திற்குள் அச்செயலியை மூடக்கும்படி நாட்டிலுள்ள பயனர்களுக்கு காங்கிரஸ் முன்னதாக உத்தரவிட்டது.
இருப்பினும், டிக்டாக் தொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ ஒப்பந்தமும் சீனா வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடவில்லை.
இதனிடையே, பேச்சுவார்த்தை வெற்றிகரமான முறையில் முடியும் என்று முன்னதாக டிரம்ப் அறிவித்திருந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)