Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

மலாய் மற்றும் இஸ்லாமியர்களின் உரிமை பாதுகாக்கப்படும் வேளையில், பிற இனங்களின் உரிமைகள் மறுக்கப்படக்கூடாது

13/09/2025 03:42 PM

மெர்சிங், 13 செப்டம்பர் (பெர்னாமா) -- மலேசிய குடிமக்களான பிற இனங்களின் உரிமைகளை மறுக்காமல், மலாய் மற்றும் முஸ்லிம் பெரும்பான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டால், இந்நாட்டின் ஒருமைப்பாட்டின் உத்தரவாதம் நிலைநிறுத்தப்படும்.

அதுவே, இத்தனை காலமும் கடைப்பிடிக்கப்பட்ட தேசிய ஒருமைப்பாட்டின் அடிப்படையாகும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் எடுத்துரைத்தார்.

''நாம் ஒருமைப்பாட்டின் உத்தரவாதத்தை நிலைநிறுத்த விரும்பினால், பெரும்பான்மை மலாய்க்காரர்கள் மற்றும் முஸ்லிம்களைக் கொண்ட இந்த நாட்டில், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். ஆனால், இந்த நாடு அனைத்து குடிமக்களின் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும். சீனர்கள், இந்தியர்கள், பூர்வகுடியினர், டாயாக் மற்றும் கடசான் ஆகியோர்,'' என்றார் அவர்.

இன்று, மெர்சிங்கில், 27-வது ஜோகூர் சாரணர்கள் பொதுப் பேரவையை முன்னிட்டு நடைபெற்ற அன்வாருடனான சந்திப்பின்போது, அவர் அதனைக் கூறினார்.

இதனிடையே, நாட்டின் தலைவர்கள் மற்றும் எதிர்கால வாரிசுகளான இளைஞர்களின் பங்கு மற்றும் பொறுப்பு குறித்து கருத்துரைத்த பிரதமர், அவர்களின் கட்டொழுங்கு மற்றும் திறன்களை வளர்ப்பதற்கு தகுந்த வாய்ப்புகளும் பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)