Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

பாலி தீவில் வெள்ளம்; 14 பேர் பலி

12/09/2025 06:36 PM

டென்பசார், 12 செப்டம்பர் (பெர்னாமா) -- இந்தோனேசியாவின் புகழ் பெற்ற சுற்றுலா தீவான பாலியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது.

மழை பொழிவு குறைந்திருக்கும் நிலையில், பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர்மட்டம் குறைந்து வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

டென்பசார் எனும் பகுதியில் காணாமல் போன இருவரைத் தேடும் பணியில் 125 மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் வெளிநாட்டினர் யாரும் இல்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 500க்கும் மேற்பட்டோர் பள்ளிகள் மற்றும் மசூதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 9 மற்றும் 10-ஆம் தேதிகளில் பெய்த மழையினால், டென்பசார் உட்பட எட்டு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது.

இதனால் தீவில் உள்ள அனைத்துலக விமான நிலையத்திற்குச் செல்லும் முக்கிய சாலைகள் மூடப்பட்டன. 

சில பகுதிகளில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)