Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

சாரா உதவி திட்டத்தின் கீழ் 11 கோடியே 71 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான பொருள்கள் விற்பனை

04/09/2025 01:57 PM

கோலாலம்பூர், 04 செப்டம்பர் (பெர்னாமா) --   ரஹ்மா அடிப்படை உதவித் திட்டம், சாராவின் கீழ் நேற்று 11 கோடியே 71 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான அடிப்படை பொருள்கள் விற்பனை செய்யப்பட்டன.

இதன் வழி, நாடு முழுவதும் உள்ள 18 லட்சம் பேர் பயனடைந்ததாக, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் நிதி அமைச்சு கூறியது.

செப்டம்பர் 2-ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட 11 லட்சம் பேருடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை அதிகம் என்று அமைச்சு அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

செப்டம்பர் 2-ஆம் தேதி 95 விழுக்காடாக இருந்த பரிவர்த்தனை விகிதமும் 99.7 விழுக்காடாக அதிகரித்திருப்பதாக நிதி அமைச்சு தெரிவித்தது.

கடந்த மூன்று நாள்களாக சாரா அமைப்பின் செயலாக்கத் திறனை மேம்படுத்தவும் விரிவுபடுத்தவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், இந்த எண்ணிக்கை அதிகரிப்புக்கு பங்களித்துள்ளதாகவும் அமைச்சு விவரித்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)