கோலாலம்பூர், 22 ஆகஸ்ட் (பெர்னாமா) -- மாணவி சாரா கைரினா மகாதீரின் மரணம் தொடர்பான வழக்கில் விதிமுறைகளை மீறியதாக விசாரணையில் கண்டறியப்பட்டால், விசாரணை அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மீது அரச மலேசிய போலீஸ் படை கட்டொழுங்கு நடவடிக்கையை மேற்கொள்ளும்.
புக்கிட் அமான் நாணயம் மற்றும் தர இணக்கத் துறை இவ்வழக்கிற்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட சிறப்பு குழுவுடன் இணைந்து உள் விசாரணையைத் தொடங்கிவிட்டதாக டத்தோ ஶ்ரீ முஹாமட் காலிட் இஸ்மாயில் கூறினார்.
சட்டம் மற்றும் செயல்பாட்டு தர விதிமுறை, SOP-யைப் பின்பற்றி PDRM விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக Mohd Khalid Ismail தெரிவித்தார்.
“சில நடவடிக்கைகள் கட்டொழுங்கு கண்ணோட்டத்தில் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும். மேலும், எந்த அளவிற்கு விதிமீறல்கள் இருக்கிறது என்பதைக் கும் வரை, தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு JIPS இயக்குநரிடம் கேட்டுள்ளோம்,“ என்றார் அவர்.
தொடக்கத்தில் பிரேதப் பரிசோதனை விண்ணப்பத்தில் ஏற்பட்ட தாமதம், இவ்வழக்கில் எஸ்.ஓ.பி-க்கு இணங்காததற்கான காரணங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)