ஜோகூர் பாரு, 16 ஆகஸ்ட் (பெர்னாமா) -- ஜூலை மாதம் முதலாம் தேதி தொடங்கி, நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஒப்ஸ் லக்ஸரி சோதனை நடவடிக்கையின் மூலம், செல்லுபடியாகும் சாலை வரி மற்றும் வாகன காப்புறுதிகளைக் கொண்டிருக்காத 270 சொகுசு வாகனங்களை, சாலை போக்குவரத்து துறை, ஜேபிஜே பறிமுதல் செய்தது.
மோட்டார் வாகன உரிமம் அல்லது காப்புறுதி இல்லாமல் சாலையில் பயணிக்கும் சொகுசு வாகனங்களின் மீது நடவடிக்கை எடுக்க அனைத்து மாநிலங்களிலும் தொடர்ச்சியான சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, ஜேபிஜே தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபட்லி ரம்லி தெரிவித்தார்.
''தற்போது நாங்கள் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை ஒரு தீர்க்கமான செயல். சாலை வரி மற்றும் காப்புறுதி இல்லாமல் சாலையில் பயணிக்கும் சொகுசு வாகனங்களின் மீது. ஒரு சிலர் காப்புறுதி வைத்திருக்கின்றனர் ஆனால் சாலை வரி இல்லை. எனவே, நாங்கள் புதிய அணுகுமுறையை மேற்கொண்டிருக்கின்றோம். அனைத்து செயல்முறைகளும் நிறைவுப் பெறும் வரை வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளது,'' என்றார் அவர்.
அண்மையில், ஜோகூர் பாரு, தாமான் டாயாவில் உள்ள ஜே.பி.ஜே தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், அவர் அதனை கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)