ஷா ஆலம், 14 ஆகஸ்ட் (பெர்னாமா) -- தகவல்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தாமல் புகைப்படங்களைப் பகிர்வது, படவிளக்கங்களை எழுதுவது மற்றும் சமூக ஊடகங்களில் பதிவிடுவதன் வழியாக தற்போது அதிகமான தனிநபர்கள், திடீர் செய்தியாளர்களாக மாறி வருகின்றனர்.
செய்தியின் ஆதாரத்தை சரிபார்க்காததால் அந்நடவடிக்கை சமூகத்தில் சலசலப்பை ஏற்படுத்துவதோடு தவறான தகவல்களை பரப்பும் அபாயத்தை உருவாக்குவதாக பெர்னாமா தலைமை நிர்வாக அதிகாரி டத்தின் படுக்கா நூருல் அஃபிடா கமாலுடின் எடுத்துரைத்தார்.
''இளைஞர்கள் வெறும் பார்வையாளர்கள் மட்டுமல்ல. இளைஞர்கள் புதிய போக்குகளை உருவாக்குபவர்கள், பிரச்சனைகளை நகர்த்துபவர்கள் மற்றும் கதைகளை உருவாக்குபவர்கள். நீங்கள் நேர்மறையான விஷயங்களைப் பரப்பினால், அது சாதாரண மக்களுக்கு இணக்கமான சூழ்நிலையை உருவாக்க உதவும். பரப்பப்படும் தகவல் பொய்யாக இருந்தால், விளைவு குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே, உங்கள் விருப்பத்தை அறிந்து முடிவு செய்யுங்கள். உண்மையைப் பரப்பும் ஒரு முகவராக செயல்படுங்கள்'', என்றார் அவர்.
இன்று, ஷா ஆலம்-இல் உள்ள Politeknik மாணவர்களுடனான 2025 தேசிய ஊடகவியலாளர் தினத்தை முன்னிட்டு, Jelajah HAWANA நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் உரையாற்றிய நூருல் அஃபிடா அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)