பேங்காக், 10 ஆகஸ்ட் (பெர்னாமா) - கடந்த வியாழக்கிழமை தாய்லாந்து, பேங்காக்கில் தீயிட்டு கொளுத்தப்பட்ட இரு மலேசிய சுற்றுப் பயணிகளின் உடல் நிலை சீரான பிறகு, அவர்களை மீண்டும் மலேசியாவிற்கு திருப்பி அனுப்ப அனுமதிக்குமாறு அவர்களின் குடும்பத்தினர் தாய்லாந்து அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
27 வயதுடைய Gan Xiao Zhen மற்றும் அவரது 26 வயதான காதலன் Ong Yik Leong ஆகிய இரு மலேசியர்களையும் பேங்காக்கில் உள்ள ஒரு பேரங்காடியின் அருகில் வேலையில்லா ஆடவர் ஒருவர் தீயிட்டுக் கொளுத்தியுள்ளார்.
சம்பவம் நிகழ்வதற்கு ஒரு நாள் முன்னதாக, தமது மகள் விடுமுறைக்காக பேங்காக் சென்றிருந்ததாக நேற்று, பேங்காக்கின் King Chulalongkorn Memorial மருத்துவமனையில் Xiao Zhen's தந்தை கான் கின் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
இவ்வாண்டு தாய்லாந்தில் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்திருந்த போதிலும், அந்நாடு பாதுகாப்பான நிலையில் இருப்பதாக கூறி Xiao Zhen தனக்கு நம்பிக்கை ஏற்படுத்தியாக, கான் கின் தெரிவித்தார்.
இதனிடையே, பாதிக்கப்பட்டவர்களின் தற்போதைய நிலை குறித்த மருத்துவ அறிக்கைகளை, தாய்லாந்து அதிகாரிகள் மற்றும் மருத்துவ ஊழியர்களுடன் மேற்கொண்ட விளக்கக் கூட்டத்தின் போது, இரு குடும்பத்தினரும் கோரியதாக அவர் கூறினார்.
Gan Xiao Zhen மற்றும் Ong Yik Leong-ஐ தீ வைத்துக் கொளுத்திய 30 வயது ஆடவர் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பின்னர் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)