மாடோ க்ரோசோ, 10 ஆகஸ்ட் (பெர்னாமா) - பிரேசில், மாடோ க்ரோசோ எனும் மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பேருந்து விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 45 பேர் காயமடைந்தனர்.
பருத்தி விதைகளை ஏற்றிச் சென்ற லாரியுடன் பேருந்து நேருக்கு நேர் மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
காயமடைந்தவர்களின் 11 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்திருக்கிறது.
விபத்து குறித்து முழு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)