கோலாலம்பூர், 10 ஜூலை (பெர்னாமா) -- கடந்த மே மாதம் 13-ஆம் தேதி 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 'CEO Batu' என்றழைக்கப்படும் சமூக ஊடகத்தில் செல்வாக்கு மிக்கவர் ஒருவர் இன்று, அம்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மறுத்து விசாரணை கோரினார்.
மே 16-ஆம் தேதி, சன்வே பத்து கேவ்சில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் பின்னிரவு 1.16 மணிக்கு 13 வயது சிறுமியை உடல் ரீதியாக பாலியல் வன்கொடுமை செய்ததாக 22 வயதுடைய முஹமட் இக்பால் முஹமட் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 20,000 ரிங்கிட் வரையிலான அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் 2017-ஆம் ஆண்டு சிறார் பாலியல் வன்கொடுமை சட்டம் செக்ஷன் 15(a) (1)-இன் கீழ் குற்றம் பதிவாகியுள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்டவரை, 6,000 ரிங்கிட் ஜாமின் தொகை மற்றும் தனிநபர் உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்க நீதிபதி நோர்ஷீலா கமாருடின் அனுமதியளித்தார்.
கூடுதலாக, மாதத்திற்கு ஒருமுறை அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும், வழக்கு விசாரணை முடிவடையும்வரை பாதிக்கப்பட்டவரை அணுகவோ துன்புறுத்தவோ கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]