தைவான் , 07 ஜூலை (பெர்னாமா) -- சீனா, தைவானின் சியாயி கவுண்டியில், நேற்றிரவு டானாஸ் சூறாவளி கரையைக் கடந்ததை அடுத்து, தீவு முழுவதும் சாலைகள் சேதமடைந்து மின்சார துண்டிப்பும் ஏற்பட்டது.
இவ்வாண்டில் நான்காவது முறையாக வீசும் டானாஸ் சூறாவளி, தைவான் தீவை முதன் முறையாக தாக்கியிருப்பதாக சீன வானிலை ஆய்வு மையம் கூறியது.
நேற்றிரவு தொடங்கி இன்று காலை வரை அதன் மிகக் கடுமையான விளைவுகள் உணரப்பட்டு, பலத்த காற்று வீசி பெரும் மழை பெய்துள்ளது.
இதனால், நெடுஞ்சாலைகளில் மண்சரிவுகள் ஏற்பட்டதோடு, தெற்கு தைவானின் பிங்துங் மாவட்டத்தில் சாலைகள் வெள்ளம் காரணமாக சேதமடைந்தன.
அதேவேளையில், காவோசியுங் சிட்டி முழுவதும் பெரும் மின்சாரத் துண்டிப்பு ஏற்பட்டதில்,
30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டன.
பலத்த காற்று வீசியதால் மரக்கிளைகள் உடைந்து மற்றும் அறிவிப்பு பலகைகள் பறந்து விழுந்ததில் பாதசாரிகள் காயமடைந்தனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)