Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

பெருவில் 3,500 ஆண்டுகள் பழைமையான நகரம் கண்டுபிடிப்பு

04/07/2025 05:29 PM

லீமா , 04 ஜூலை (பெர்னாமா) - பெருவில் 3,500 ஆண்டுகள் பழைமையான நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவில் ஆரம்ப நாகரிகங்கள் தோன்றிய அதே காலக்கட்டத்தில், பசிபிக் கடற்கரை கலாச்சாரங்களை Andes மற்றும் Amazon-இல் உள்ளவற்றுடன் இணைக்கும் வர்த்தக மையமாகவும் அது செயல்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அந்நகர மையம் ஒரு மலைத்தொடர் மேடையில் உள்ள வட்டவடிவ அமைப்பாக இருப்பது, ஆளில்லா விமானத்தின் காட்சிகள் காட்டுகின்றன.

அது, கடல் மட்டத்திலிருந்து சுமார் 600 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்ட கல் மற்றும் மண் கட்டடங்களின் பாகங்களையும் கொண்டுள்ளது.

Penico என அழைக்கப்படும் இந்நகர மையம், வடக்கு Barranca மாகாணத்தில் அமைந்துள்ளது. 

இது கிமு 1800 முதல் 1500 காலப்பகுதியில் நிறுவப்பட்டது. 

இது அமெரிக்காவின் பழமையான நாகரிகமாகக் கருதப்படும் Caral எனும் 5,000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவான இடத்திற்கு அருகிலேயே உள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)