Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

நேரடி தொலைத்தொடர்பு வசதி இல்லாத நெடுஞ்சாலைகள் அடையாளம் காணப்படும்

01/07/2025 05:39 PM

ஜார்ஜ்டவுன், 01 ஜூலை (பெர்னாமா) --   நேரடி தொலைத்தொடர்பு வசதி இல்லாத சுமார் 50 கிலோமீட்டர் கொண்ட நெடுஞ்சலைகளை, மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்.சி.எம்.சி-யும் மலேசிய நெடுஞ்சாலை வாரியம், எல்.எல்.எம்-மும் அடையாளம் காணும்.

நாடு முழுவதிலுமுள்ள நெடுஞ்சாலைகள் உட்பட இணையப் பயன்பாட்டு சிக்கலுக்குத் தீர்வுக் காணும் நோக்கில், 'Di Mana Ada Jalan, Di Situ Ada Internet' என்ற கொள்கையைப் பயன்படுத்தவிருப்பதாக தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி பட்சில் கூறினார்.

"ஓய்வெடுப்பதற்கான இடமில்லாத சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தை அடையாளம் காண மலேசிய நெடுஞ்சாலை வாரியம், எல்.எல்.எம்-உடன் இணைந்து பணியாற்றுவோம். நெடுஞ்சாலைகள் உட்பட இணையப் பயன்பாட்டு சிக்கலைத் தீர்க்க, சாலை இருக்கும் இடத்தில் இணையப் பயன்பாடு இருக்கும் என்ற கொள்கையைப் பயன்படுத்துவோம்", என்றார் அவர்.

இன்று, பினாங்கு, தஞ்சோங் அசாமில் உள்ள 4G Enam Hala YES கோபுரம், MOCN-யைப் பார்வையிட்ட பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)