சங்கரெட்டி, 01 ஜூலை (பெர்னாமா) -- இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் இரசாயன தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 35 பேர் பலியான வேளையில், பலர் காயமடைந்துள்ளனர்.
சிகாச்சி இரசாயன தொழிற்சாலையில் அணு உலை வெடித்ததைத் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெடி விபத்து ஏற்பட்ட பகுதியில் சுமார் 90 பேர் பணிபுரிந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
வெடிப்பு ஏற்பட்டபோது, அந்த தொழிலாளர்கள் 100 மீட்டர் தூரம் வரை தூக்கி வீசப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து தீ பரவியதாக தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் கூறினர்.
காயமடைந்த தொழிலாளர்களும் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், பலர் கடுமையான தீக்காயங்களுக்கு ஆளாகியுள்ளதாக தீயணைப்புத் துறை தெரிவித்தது.
தொழில்துறை நிறுவனங்கள் பாதுகாப்பு நெறிமுறைகளை மீறுவது மற்றும் போதுமான அரசாங்க மேற்பார்வையைக் கொண்டிருக்காததன் காரணங்களால் இந்தியாவில் பெரும்பாலும் தொழில்துறை விபத்துகள் ஏற்படுகின்றன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)