பிரான்ஸ், 30 ஜூன் (பெர்னாமா) - பள்ளிகள், பூங்காக்கள், கடற்கரை, பேருந்து நிறுத்துமிடம் மற்றும் சிறுவர்கள் கூடும் பொது இடங்களில் புகை பிடிக்க பிரான்ஸ் அரசாங்கம் தடை விதித்துள்ளது.
இத்தடை ஜூலை முதலாம் தேதி தொடங்கி அமலுக்கு வருகிறது.
புகையிலை பயன்பாடு மீதான அரசாங்கத்தின் இக்கடுமையான நடவடிக்கைக்கு சில தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.
இருப்பினும் புகைபிடிப்பதற்கு தடை விதிக்கப்படவில்லை என்றும் மக்களின் ஆரோக்கியத்தையும் இளைஞர்களின் கல்வியையும் பாதிக்கக்கூடிய சில இடங்களில் மட்டுமே அத்தடை அமல்படுத்தவிருப்பதாகவும் அந்நாட்டின் சுகாதார அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.
புகைப்பிடிப்பதை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை பிரான்ஸ் அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
பிரான்சில் நாள் ஒன்றுக்கு 200க்கும் மேற்பட்டோர் புகையிலை தொடர்பான நோயால் உயிரிழப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஆண்டுக்கு சுமார் 75,000 பேர் பலியாவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)