BREAKING NEWS | Thailand's Constitutional Court Tuesday suspended PM Paetongtarn pending deliberation of a leaked phone call case | |
கோலா திரெங்கானு, 29 ஜூன் (பெர்னாமா) - படகு விபத்தில் பலியாகிய 40 வயதுடைய எஸ்.ஆறுமுகம், அவரின் மகளான மூன்று வயதுடைய ஏ.சர்விக்கா மற்றும் அவர்களின் உறவுக்காரப் பிள்ளையான பத்து வயதுடைய வி.வெண்பனி ஆகிய மூவரின் பிரேதப் பரிசோதனை இன்று மாலை மணி 4.30 மணியளவில் நிறைவுபெற்றது.
அதன் பின்னர், அவர்களின் நல்லுடகள் பினாங்கு பட்டர்வொர்த் மற்றும் கெடா சுங்கை பட்டாணிக்கு கொண்டு செல்லப்பட்டன.
விபத்துக்குள்ளான அப்படகில் பயணித்த 15 பேரும் உறவினர்கள் என்றும் அவர்கள் திரெங்கானுவில் உள்ள தீவில் விடுமுறையை கழிப்பதற்காக சென்றதாக திரெங்கானு மாநிலத்தின் இஸ்லாமியர் அல்லாத விவகாரகளுக்கான மந்திரி புசாரின் சிறப்பதிகாரி டாக்டர் கே.பாலசந்திரன் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)