ஜெர்த்தே, 29 ஜூன் (பெர்னாமா) -- விடுமுறை காலங்களில் மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்புவதற்கு சுற்றுலா பேருந்தை வாடகைக்கு எடுப்பது உட்பட சொந்த முயற்சிகளை மேற்கொள்ளும் மாணவர்களின் எந்தவொரு நடவடிக்கையையும் உயர்கல்வி கழகங்கள் கண்காணிக்க வேண்டும்.
மாணவர்களை உட்படுத்தி தேவையற்ற சம்பவங்கள் நிகழ்வதை தடுக்க இது அவசியமானது என்று உயர்க்கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சம்ரி அப்துல் காடிர் தெரிவித்தார்.
மாணவர்களைத் தொடர்புக் கொள்வதோடு, அவர்கள் மேற்கொள்ளூம் எந்தவொரு நடவடிக்கைகளையும் கண்காணிக்கும்படி பல்கலைக்கழக தரப்பு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
ஜூன் 9ஆம் தேதி நிகழ்ந்த கொடூரமான விபத்தைத் தொடர்ந்து, பல்கலைக்கழக மாணவர்கள் பயணம் செய்யும் நேரம் உட்பட பலவேறு கருத்துகளையும் பரிந்துரைகளையும் அமைச்சு ஆராய்ந்து வருவதாக சம்ரி கூறுகினார்.
''இதுபோன்ற சம்பவங்களின் மூலமும் அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் வழியும் நாம் கற்றுக் கொள்ளும் வகையில், துணை வேந்தர்களுடன் நாங்கள் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளோம்,'' என்றார் அவர்.
மாணவர்கள் எதிர்கொள்ளூம் பிரச்சனைகள் குறிப்பாக இறப்புகள் உட்படுத்திய பிரச்சனைகளைத் தீர்வு காண்பதில் அமைச்சு எப்போதும் விரைவாக செயல்படும் என்று அவர் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)