குஜராத், 27 ஜூன் (பெர்னாமா) -- அண்மையில், இந்தியா, குஜராத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா AI 171 விமானத்தின் கருப்புப் பெட்டி தரவுகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்தது.
இவ்விபத்துக்கான காரணங்களை அடையாளம் காணும் பொருட்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
CVR எனப்படும் விமானி அறையின் குரல் பதிவு பெட்டி மற்றும் FDR எனப்படும் விமானத் தரவு பதிவு ஆகியவற்றின் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய மத்திய பொது விமானப் போக்குவரத்து அமைச்சு கூறியது.
அனைத்துலக விதிமுறைகள் மற்றும் நெறிமுறைகளுக்கு ஏற்ப கடந்த ஜூன் 13-ஆம் தேதி பல்துறை குழு ஒன்றை அமைத்து, விமான விபத்து புலனாய்வுப் பணியகம் உடனடியாக விசாரணையைத் தொடங்கியதாக அவ்வமைச்சு குறிப்பிட்டது.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இவ்விமானத்தின் அனைத்துலக ஒப்பந்தத்தின்படி, மருத்துவ நிபுணர்கள், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம், NTSB தொழில்நுட்ப நிபுணர்கள் அக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)