கோலாலம்பூர், 20 ஜூன் (பெர்னாமா) -- ஜூலை முதலாம் தேதி முதல் அமல்படுத்தப்படவிருக்கும் விற்பனை மற்றும் சேவை வரி, எஸ்.எஸ்.டி மறுஆய்வு செயலாக்கம் மற்றும் விரிவாக்கத்தின் கீழ் வெள்ளை சீனிக்கு வரி விதிக்கப்படாது.
இருப்பினும், தூள் சீனியைத் தயாரிக்க பயன்படுத்தப்படும் சுத்திகரிக்கப்படாத சீனிக்கு ஐந்து விழுக்காடு விற்பனை வரி விதிக்கப்படும் என்று நிதி அமைச்சு விளக்கம் அளித்திருக்கிறது.
மூலப்பொருட்கள் மற்றும் அதன் உள்ளீட்டிற்கான வரி விலக்குக்குச் சீனி உற்பத்தியாளர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையின் வழி நிதி அமைச்சு தெரிவிக்கிறது.
சீனி விலைகளின் நிலைத்தன்மையை உறுதி செய்ய அரசாங்கத்தின் மாதாந்திர உதவி தொகை எம்.எஸ்.எம் மலேசியா ஹோல்டிங்ஸ் நிறுவனம் போன்ற நிறுவனங்களுக்கு வழங்கப்படுவதால், சுத்திகரிக்கப்பட்ட சீனி விலை ஏற்றம் காண கூடாது என்று அந்த அமைச்சு கூறியிருக்கிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)