Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 விளையாட்டு

நான்காம் சுற்றுக்கு முன்னேறினார் நோவாக் ஜோகோவிச்

01/06/2025 05:02 PM

பாரிஸ், 01 ஜூன் (பெர்னாமா) -- பிரான்ஸ் பொது டென்னிஸ் போட்டி....

சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் Austria-வின் தகுதி சுற்று வீரர் பிலிப் மிசோலிக்கை வீழ்த்திய நோவாக் ஜோகோவிச், தமது 99ஆவது வெற்றியைப் பதிவு செய்து போட்டியின் நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

தற்போது ஜோகோவிச் 25ஆவது Grand Slam பட்டத்தை வெல்வதற்கான ஒரு படி முன்னிலையில் இருக்கின்றார்.

Paris-சில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டத்தில், 38 வயதுடைய ஜோகோவிச், வழக்கத்திற்கு மாறான தற்காப்பு ஆட்டத்திறனை வெளிப்படுத்தி, முதல் செட்டில் மிசோலிக்கை தோற்கடித்து முன்னிலை வகித்தார்.

இரண்டாம் செட்டில் சில யுத்திகளுடன் விளையாடி வெற்றிப் பெற்ற அவர், மூன்றாம் செட்டிலும் அந்த வெற்றியை நீடிக்கச் செய்து 6-3, 6-4, 6-2 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து அவர், அடுத்த ஆட்டத்தில் பிரிட்டனின் கேமரூன் நோரி உடன் மோதவுள்ளார்.

மற்றொரு நிலவரத்தில், கடந்த 2022ஆம் ஆண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்த அமெரிக்காவின் கோகோ காஃப், செக் குடியரசின் மேரி பௌஸ்கோவாவின் கடுமையான சவாலை எதிர்கொண்டாலும், 6-1, 7-6 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்று நான்காம் சுற்றுக்கு முன்னேறினார்.

அடுத்த ஆட்டத்தில், 21 வயதுடைய காஃப், ரஷ்யாவைச் சேர்ந்த 30 வயதுடைய எகடெரினா அலெக்ஸாண்ட்ரோவா உடன் மோதவுள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ) 502