Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 விளையாட்டு

மலேசிய மாஸ்டர்ஸ்; வெய் சோங்- காய் வுன் இறுதி ஆட்டத்திற்கு தேர்வு

24/05/2025 06:26 PM

புக்கிட் ஜாலில், 24 மே (பெர்னாமா) -- 2025 மலேசிய மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு நாட்டின் ஆடவர் இரட்டையர் மன் வெய் சோங்- தி காய் வுன் (MAN WEI CHONG-TEE KAI WUN) தேர்வாகினார்.

கோலாலம்பூர், புக்கிட் ஜாலிலில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் வெய் சோங்-  காய் வுன்  ஜோடி, ஜப்பானின் டகுரோ ஹோக்கி-யுகோ கோபயாஷி (Takuro Hoki-Yugo Kobayashi) ஜோடியுடன் மோதியது.

இவ்வாட்டத்தில், 21-12, 21-14 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்று, வெய் சோங்-  காய் வுன் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறினர்.

இந்த ஆட்டம் 31 நிமிடங்கள் வரை மட்டுமே நீடித்தது.

கடந்த ஜனவரியில் 2025 இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்ற பிறகு, இப்போட்டியின் இறுதி ஆட்டத்திற்குத் தேர்வாகியிருப்பதன் வழி, இந்த பருவத்தில் இரண்டாவது பட்டத்தை வெல்லும் வாய்ப்பை வெய் சோங்-  காய் வுன் பெற்றுள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)