சாடா, 30 ஏப்ரல் (பெர்னாமா) -- திங்கட்கிழமை அதிகாலை வடக்கு யேமனில் உள்ள ஒரு தடுப்பு முகாமில் அமெரிக்கா மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் ஆப்பிரிக்காவை சேர்ந்த 68 குடியேறிகள் கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதலை பொதுமக்களுக்கு எதிரான கடுமையான குற்றமாக கருதுவதாக யேமன் சாடியிருக்கிறது.
இக்கொடூரத் தாக்குதலில் 47 பேர் கடுமையான தாக்குதலுக்கு ஆளானதாக ஹூத்தி படையினரின் அல்-மசிரா தொலைகாட்சி தெரிவித்திருக்கிறது.
இம்முகாம், பொதுமக்கள் நலன் கருதி ஐ.நா. மேற்பார்வையின் கீழ் செயல்பட்டு வருவதாக யேமன் கூறியது.
இந்த முகாம் பொதுமக்களுக்கான வசதி என்றும், இராணுவத்துடன் இம்முகாமிற்கு எந்த தொடர்பும் இல்லை என்று தெரிந்தும் அமெரிக்கா இத்தாக்குதலை மேற்கொண்டதாக ஹூத்தி குறிப்பிட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)