Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

பள்ளிக்கு மறுபெயரிடும் திட்டத்தை மலாக்கா மாநில அரசாங்கம் ஆலோசித்து வருகின்றது

28/04/2025 04:01 PM

அலோர் காஜா, 28 ஏப்ரல் (பெர்னாமா) --    மலாக்காவில் உள்ள தேசிய வகை சீனப் பள்ளி ஒன்றின் பெயரை லக்சமனா செங் ஹொ என்று பெயரிடும் பரிந்துரையைப் பள்ளி வாரியம் எல்.பி.எஸ்ஸுடன் இணைந்து அம்மாநில அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.

மாநில அரசாங்கத்தின் விருப்பத்தைத் தெரிவிக்கும் நோக்கில் முன்னதாக தேசிய வகை ஜாசின் லலாங் சீனப் பள்ளியுடன் மாநில கல்வி துறை ஜே.பி.என் ஒரு சந்திப்பு நடத்தியது.

எனினும், பெரும்பான்மையான பெற்றோர்களும் பள்ளி வாரியமும் அப்பரிந்துரைக்கு உடன்படவில்லை என்று உயர்கல்வி மற்றும் மத விவகாரங்களுக்கான மலாக்கா மாநில கல்வி ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ரஹ்மாட் மரிமான் கூறினார்.

"மலாக்கா மாநில ஜே.பி.என், எல்.பி.எஸ் மற்றும் தேசிய வகை சிம்பாங் பெக்கோ சீனப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்துடன் பள்ளியின் பெயரை மாற்றுவதற்கான விருப்பத்தைக் முன்வைக்கும் நோக்கில் ஒரு சந்திப்பு நடத்தவுள்ளது", என்று அவர் கூறினார்.

தேசிய வகை சிம்பாங் பெக்கோ சீனப் பள்ளியின் வரலாறு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சேமித்து வைக்க பள்ளியில் ஒரு வரலாற்று அறையை உருவாக்குவது, அசல் பெயரைப் பராமரித்து புதிய பெயரை ஏற்றுக் கொள்வது அல்லது அசல் பெயரை தவிர்த்து புதிய பெயரை ஏற்றுக் கொள்வது போன்ற பரிந்துரைகளைப் பள்ளி வாரியம் முன்வைத்ததாக, அவர் தெரிவித்தார்.

இன்று, நடைபெற்ற மாநில சட்டமன்ற கூட்டத்தில், 620 ஆண்டுகளுக்கு முன்பு மலாக்கா மற்று சீனாவிற்கும் இடையிலான அனைத்துலக உறவை வலுப்படுத்தும் முயற்சியாக பள்ளியின் பெயரை லக்சமனா செங் ஹொ என மறுபெயரிடுவதற்கு முன்மொழியப்பட்ட பரிந்துரை குறித்து, கோத்தா லக்சமனா சட்டமன்ற உறுப்பினர் லோ சே லியொங் எழுப்பிய கேள்விக்கு டத்தோ ரஹ்மாட் அவ்வாறு பதிலளித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)