கோலாலம்பூர், 27 ஏப்ரல் (பெர்னாமா) -- 2025 கிராஸ்ஹொப்பர் கிண்ணத்தின் இறுதி போட்டிக்கு தேசிய ஸ்குவாஷ் வீராங்கனை எஸ்.சிவசங்கரி முன்னேறி உள்ளார்.
இன்று அதிகாலை, சுவிட்சர்லாந்து, சூரிச்சில் நடைபெற்ற கடும் போட்டியில் டின்னே கிலிஸை வீழ்த்தி அவர் இந்த வெற்றியை உறுதி செய்தார்.
உலகத் தரவரிசையில் 11ஆவது இடத்தில் இருக்கும் சிவசங்கரி சிறந்த ஆட்டத்திறனை வெளிப்படுத்தி பெல்ஜியமைச் சேர்ந்த டின்னே கிலிஸை 3-1 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்றுள்ளார்.
அதைத் தொடந்து, திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் இறுதி ஆட்டத்தில் சிவசங்கரி உலகின் முதல்நிலை ஆட்டக்காரரான எகிப்தைச் சேர்ந்த நூரான் கோஹரைச் சந்திக்கவுள்ளார்.
முன்னதாக நடைபெற்ற மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் நூரான் 3-1 என்ற புள்ளிகளில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜார்ஜினா கென்னடியைத் தோற்கடித்தார்.
மற்றொரு நிலவரத்தில், வாஷிங்டனில் நடைபெற்ற Squash On Fire 2025 போட்டியில் நாட்டின் மற்றொரு ஸ்குவாஷ் வீராங்கனையான ரேஷல் அர்னால்ட் இறுதி போட்டிக்கு தேர்வாகி உள்ளார்.
எகிப்தைச் சேர்ந்த ரோவன் எலராபி 3-2 என்ற புள்ளிகளில் தோற்கடித்த அவர், இறுதி போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த அமண்டா சோபியைச் சந்திக்கவுள்ளார்.
அதே போட்டியின் ஆடவர் ஒற்றையருக்கான பிரிவில் கரீம் எல் துருக்கியை 3-0 என்று தோற்கடித்து ங் எய்ன் யோவ் இறுதி சுற்றுக்குத் தேர்வாகி உள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)