Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 விளையாட்டு

மாட்ரிட் பொது டென்னிஸ் போட்டி; அரினா சபலென்கா தேர்வு

26/04/2025 04:49 PM

மாட்ரிட், 26 ஏப்ரல் (பெர்னாமா) --   மாட்ரிட் பொது டென்னிஸ் போட்டியில் மூன்றாம் ஆட்டத்திற்கு உலகின் முதல் நிலை வீராங்கனை அரினா சபலென்கா தேர்வாகினார்.

நேற்று நடைபெற்ற இரண்டாம் சுற்று ஆட்டத்தில், அவர் அண்ணா பிலிங்கோவாவுடன் விளையாடினார்.

இவ்வாட்டத்தில் 6-3 6-4 என்ற நேரடி செட்களில், அரினா சபலென்கா எளிதாக வெற்றி பெற்றார்.

இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 39 நிமிடங்கள் வரை நீடித்தது.

அடுத்த ஆட்டத்தில், மூன்று முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ள சபலென்கா, எலிஸ் மெர்டென்சுடன் விளையாடவுள்ளார்.

மற்றோர் ஆட்டத்தில், உலகின் ஆறாம் நிலை வீராங்கனையான ஜாஸ்மின் பயோலினி, பிரிட்டனின் கேட்டி போல்டருடன் விளையாடினார்.

ஒரு மணி நேரம் நீடித்த இவ்வாட்டத்தை 6-1 6-2 என்ற நேரடி செட்களில் பயோலினி கைப்பற்றினார்.

அடுத்த ஆட்டத்தில் அவர் மரியா சக்காரியுடன் மோதவுள்ளார்.

ஆடவருக்கான பிரிவில், காயம் காரணமாக டென்மார்க்கின் ஹோல்கர் ரூன் போட்டியில் இருந்து விடைபெற்றார்.

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இத்தாலியின்ஃபிளாவியோ கோபோலியுடன் ஹோல்கர் ரூன் களம் கண்டார்.

முதல் செட்டில் 6-2 என்று தோல்வி கண்ட ஹோல்கர் ரூன், காயம் காரணமாக விடைப்பெற்றுக் கொண்டதால் ஃபிளாவியோ கோபோலி அடுத்த ஆட்டத்திற்குத் தேர்வாகினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)