மாட்ரிட், 25 ஏப்ரல் (பெர்னாமா) -- மாட்ரிட் பொது டென்னிஸ் போட்டியின் இரண்டாம் ஆட்டத்தில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனை இகா ஷ்வன்டெக் வெற்றி பெற்றார்.
பிலிப்பைன்சின் இளம் ஆட்டக்காரர் அலெக்சண்ட்ரா இலாவுடன் இகா ஷ்வன்டெக் விளையாடினார்.
இவ்வாட்டத்தின் முதல் செட்டில் 4-6 என்ற புள்ளிகளில் இகா ஷ்வன்டெக் தோல்வி கண்டாலும், அடுத்த இரண்டு செட்களையும் 6-4, 6-2 என்ற நிலையில் வெற்றி பெற்று தமது ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தினார்.
இவர்களின் ஆட்டம் இரண்டு மணி நேரம் 15 நிமிடங்கள் வரை நீடித்தது.
அடுத்த ஆட்டத்தில் அவர் செக் குடியரசின் லிண்டா நொஸ்கொவாவுடன் விளையாடுவார்.
மற்றோர் ஆட்டத்தில், அமெரிக்காவின் கொக்கொ கவுஃப், டயனா யஸ்ட்ரெம்ஸ்காவுடன் மோதினார்.
இவ்வாட்டத்தில் 6-0, 6-2 மற்றும் 7-5 என்ற புள்ளிகளில் உக்ரேன் விளையாட்டாளரை கொக்கொ கவுஃப் தோற்கடித்தார்.
ஆடவருக்கான பிரிவில், ஜவொ ஃபொன்செக்காவும் எல்மர் மொல்லெரும் விளையாடினார்.
இவ்வாட்டத்தில் 6-2, 6-3 என்ற நேரடி செட்களில் பிரேசிலின் ஃபொன்செக்கா வெற்றி பெற்று இரண்டாம் ஆட்டத்திற்கு முன்னேறினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]